Breaking
Fri. Jan 10th, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தீர்மானித்துள்ளது.

கடற்படை அதிகாரியாக இருந்த யோசித்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறு பிரித்தானியாவின் டார்ட்மவுத் கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்தது, அங்கு கல்வியை முடிப்பதற்கு முன்னர் எவ்வாறு அவருக்கு இலங்கை கடற்படையின் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது, அரசாங்க அதிகாரியாக இருக்கும்போது அவர் எவ்வாறு தனியார் நிறுவனமொன்றின் உரிமையைப் பெற்றிருக்க முடியும் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய முறைப்பாடொன்றே கையளிக்கப்படவுள்ளது.

இந்த முறைப்பாடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இன்று திங்கட்கிழமை கையளிக்கப்படவிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான நளின்.டி.திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு, நிதி மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருந்தவர்கள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Post