Breaking
Fri. Nov 15th, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் (2) நீக்கப்படும் என்று அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடரிபில் கருத்து தெரிவித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன,

மஹிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பை நீக்குவது உசிதமானதல்ல எனவும், ஏனைய அரச தலைவர்களைவிட பயங்கரவாதிகளின் எதிரியாக அவர் கருதப்படுவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இராணுவப் பாதுகாப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (u)

By

Related Post