சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க கையளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள தீர்மானம் மரண தண்டனைக்குரிய பாரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார இந்த கருத்தை வெளியிட்டடுள்ளார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு இணங்க இந்த தலைமை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிந்தோம்.
அது எமக்கு தாக்கம் செலுத்து விடயமாக இருக்கின்றது.
இது மரண தண்டனைக்குரிய பாரிய குற்றமாகும். அடிபணிதல் மாற்று தீர்வு அல்ல என்பதையே சுட்டிக்காட்ட வேண்டும்.(sfm)