கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பகுதியில் இன்று மகிந்த ராஜபக்ஷ பங்கு பெறும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய தேசியக்கொடியை பறக்க விட்டுள்ளதை சிங்கள மொழி முன்னணி ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் சிறுபான்மையினரை பிரநிதிதித்துவம் செய்யும் நிறங்களை அகற்றிய கொடிகளை ஏந்தி சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இன்று குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச பங்குபெறும் அரசியல் கூட்டத்தில் இந்த கொடிகள் பறக்கவிட்டபட்டற்கு எந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுகின்றது.
அதேவேளை குறிப்பிட்ட கொடிகளை படம் பிடிக்க சென்ற ஊடகவியலாளர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததுடன் இந்த படங்களை பிரசுரிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவிக்கின்றது.
செய்தி மற்றும் பட உதவி : லங்காதீப செய்திச்சேவை