முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் உள்ள பணம் டுபாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நான் மீண்டுமொரு முறை பொறுப்புடன் சொல்கிறேன். மகிந்த ராஜபக்ஸ குடும்பம் மாத்திரம் குறைந்த பட்சம் 18 பில்லியன் டொலர்கள் திருடி வெளிநாடுகளில் மறைத்து வைத்துள்ளனர். டுபாயில் மகிந்தவின் பணம் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன்.
ராஜபக்ஸ குடும்பத்தின் திருட்டு விடயங்கள் தொடர்பில் மாத்திரம் ஏழுநூற்று 77 முறைப்பாடுகள் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் ஒன்றொன்றாக பார்க்க வேண்டும் என்றால் காவல்துறையினரும், நிதிமன்றமும் தமது ஏனைய நடவடிக்கைகளை நிறுதிவிட்டு இதனை மாத்திரமே பார்க்கவேண்டியிருக்கும்” என தெரிவித்தார்.