டிசம்பர் 8ஆம் திகதியன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இவ்வாறான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தேர்தல் ஆணையாருக்கு அதிகாரம் உள்ளது. எனினும் தற்போதே ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
சுவரொட்டிகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபைக்கும் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு உள்ளுர் நிர்வாகங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படடுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கொழும்பு மாநகர எல்லைக்குள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அதிகாரிகளுக்கு நேற்று பணித்துள்ளார்.