Breaking
Sat. Dec 21st, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம்காணப்படும் போது மஹிந்தவின் பின்னால் செல்வதில் பயன் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கைக்கு அமைய மஹிந்த கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்துள்ளார்.

எனவே நாம் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபாலவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட்ட பின்னரும் அவருக்குஎதிராக சூழ்ச்சிகளை செய்வது, அவரது கால்களைப் பற்றி இழுப்பது என்பவற்றை செய்ய கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிலர் இரண்டு மனநிலைகளில் உள்ளனர் அங்கு செல்வதா? இங்கு செல்வதா, என அவ்வாறு முடியாது.

ஏனெனில் நாம் ஒன்றைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கை சின்னத்துடன் யார் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் நிற்பதே சிறந்தது என்றும், அதை விடுத்து கட்சியின் தலைவரை விமர்சித்து யாராலும் முன்னோக்கி செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் கட்சிக்காக பாடுபடுகிறோமே தவிர தனிநபர்களுக்காக பாடுபடவில்லை என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post