மஹிந்தவை பணயம் வைத்து மீண்டும் அரசியலில் குதிக்க ஒருசிலர் முயற்சிக்கின்ற னர். ஆனால் மக்கள் ஒருபோதும் மஹிந்த கூட்டணியை ஆதரிக்க மாட்டார்கள். மஹிந்தவின் பிரதமர் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மஹிந்தவுக்கு குரல்கொடுக்கும் கூட்டணியே மஹிந்தவை வீழ்த்தியது என்பதை அவர் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகை யில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனிப்ப ட்ட செயற்பாடுகள் தொடர்பில் எம்மால் எந்தக் கருத்தினையும் தெரிவிக்க முடியாது. மஹிந்த ராஜபக் ஷவை கட்சியில் இணை த்துக் கொள்வதும் அவரை பிரதமர் வேட்பா ளராக நிறுத்துவதும் கட்சியின் தீர்மானமே. ஆனால் அதையும் தாண்டி மக்களின் விருப் பம் என்ற ஒன்றும் உள்ளது. மஹிந்த ராஜபக் ஷவே தலைவராக வேண்டும் என்று மக் கள் நினைத்திருந்தால் இன்றும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் அவரை மக்கள் தோற்கடித்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர். மஹிந்தவின் தோல்விக்கு அவரது ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் அடக்குமுறைகளே காரணம் என்று பொதுவாக கூறினாலும் அவரை சுற்றி இருந்த கூட்டணியினால் தான் அவர் தோல்வியை சந்தித்தார். மஹிந்தவை பலப்படுத்துவதாக கூறிக்கொண்டு அராஜக செயற்பாடுகளில் ஈடுபட்ட மஹிந்த ஆதரவு கூட்டணி இன்று அரசியல் அனாதையாக மாறிவிட்டது.
மஹிந்த ராஜபக் ஷவின் செல்வாக்கில் தான் இவர்கள் இன்றும் அரசியல் நடத்துகின்றனர். அவர்களுக்கு மஹிந்த இல்லாது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தமது அரசியலை தக்க வைத்துக் கொள்ள மஹிந்தவை மீண்டும் அரசியலில் இழுத்துவிட முயற்சிக்கின்ற னர். இவர்களால் தான் மஹிந்த மீண்டும் அழிவை சந்திக்கப் போகின்றார் என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் மஹிந்தவுக்கு மீண்டும் அதிகார ஆசை வந்துவிட்டது. ஜனாதிபதியாக இருந்தபோது தான் அனுபவித்த சுகபோக வாழ்க்கை மீண்டும் அவருக்கு தேவைப்படு கின்றது. அதற்காகவே அதிகார பகிர்வில் இப்போது பலம் கூடிய நபரின் இடத்தை தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவால் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. அவரால் பிரதமர் பதவிக்கு வரமுடியாது. அவர் மனக்கோட்டை கட்டுகின்றார். ஆனால் அவர் காணும் கனவு ஒருநாளும் பலிக்காது. யார் அவரை பிரதமராக்க முயற்சித்தாலும் மக்கள் அவரை ஒருபோதும் அதனை விரும்ப மாட்டார்கள். மக்க ளின் நம்பிக்கையை இழந்த தலைவர் மஹிந்த என்பதை அவர் நன்கு உணர்ந்து இருப்பார். கடந்த பத்து ஆண்டுகளில் நாட் டில் நடந்தவை அனைத்தை யும் மக்கள் நன்கு உண ர்ந்துள்ளனர்.
மேலும் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பலர் கருத்துக்களை தெரிவித்தாலும் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரும் வரையில் பாராளுமன்றத்தை கலை க்க முடியாது. 20ஆவது திருத்தம் இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாம் தேர்தல் திருத்தம் தொடர்பில் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். எனவே எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் நாம் தேர் தல் திருத்தம் தொடர்பில் யோசனை ஒன்றையும் முன்வைக்கவுள்ளோம்.
அதற்கமைய அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தேர்தல் முறைமையை கொண்டுவருவதே எமது நோக்கமாகும். சிறுபான்மை கட்சிகள் மற் றும் சிறிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் முறைமை மாற்றத்தில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. அதேபோல் ஜாதிக ஹெல உறுமயவின் ஏற்பாட்டில் ஒருசில சந்திப்புகள் கடந்த காலங்களில் இடம்பெற்றது. 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அனை த்து கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசிய மானதொன்றாகும். எனவே அனைவரி ன தும் ஆதரவுடன் 20ஆவது திருத்தச் சட்ட த்தை நிறைவேற்ற நாம் முயற்சிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.