அ.அருண் பிரசாந்த்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வத்திக்கான் விஜயத்திற்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச் சரவையின் பேச்சாளரும் ஊட கத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வல்ல நேற்று தெரிவித்தார்.
அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகவிய லாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், அனைவருக்கும் 25 வீத மின்கட்டண குறைப்பையும் இதன் போது அமைச்சர் உறுதிசெய்தார். இதன்போது ஓர் ஊடகவியலாளர் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் கெஹலிய,
“ஜனாதிபதி மஹிந்த ராஜபக் எதிர்வரும் மூன்றாம் திகதி பரிசுத்த பாப்பரசருக்கு இலங்கைகக்கு வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வத்திக்கானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இவரின் வருகைக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும்” என பதிலளித்தார்.
மேலும், தற்போது இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, “”ஜனாதிபதி மஹிந்த ராஜபக் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்த லில் போட்டியிட முடியாது என்றும், அவ்வாறு போட்டியிட்டால் நீதிமன் றில் வழக்குத் தொடரப்படும் எனவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளதே” என இன்னுமொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,
அப்படியயன்றால் அதன் முடிவை வழக்கின் தீர்ப்பில் பார்த்துக்கொள்வோம் என பதலளித்தார் அமைச்சர்.
மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் என்ற முடிவிலும் அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, மின்கட்டண சர்ச்சை குறித்தும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், 25 வீத மின்கட்டணக் குறைப்பு உறுதியாகியுள்ளது. இது குறித்து இன்று (நேற்று) நடைபெற்ற அமைச்சரவையின் கூட்டத்தின் போதும் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார்.