Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கட்டணத்தைச் செலுத்துமாறு கோரி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு இலங்கை போக்குவரத்துச் சபை வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த மனு கொழும்பு வர்த்தக நீதிமன்றில் நேற்று (10) பரிசீலனை செய்யப்பட்டது.

முறைப்பாட்டில் திருத்தம் செய்ய அனுமதியளிக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் சிரான் குணரட்ன, வழக்கை ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகப் பிரதானி காமினி செனரட், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவின் சார்பில் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட முதலாவது பிரச்சாரக் கூட்டம் முதல் கொட்டாவ பிரதேசத்தில் நடத்தப்பட்ட இறுதிப் பிரச்சார கூட்டம் வரையில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களை வழங்கியுள்ளது.

இந்த பஸ்களுக்காக 50 லட்ச ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 142 லட்ச ரூபா இதுவரையில் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

By

Related Post