கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 142 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எழுவரையும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 10ஆம் திகதி, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுடன், அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழ்வரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபையே கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.