70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்து க்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பேருவளையில் (29) நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மஹிந்த தரப்பினர், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தி புதிய கட்சியை அமைக்க திட்டமிடுகின்றனர். எனினும் அது சாத்தியமாகாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுக்கும் வயதாகிவிட்ட நிலையில் அவருடன் இணைந்திருப்பவர்களும் அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்தவர்களாவர்.
இந்த நிலையில் புதியகட்சி என்பது மிகப்பெரிய நகைச்சுவையாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்தும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று மைத்திரிபால சேனாநாயக்க, அனுர பண்டாரநாயக்க, சந்திரிக்கா, விஜயகுமாரதுங்க, லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திஸாநாயக்க போன்றோர் தனிக்கட்சிகளை அமைத்தனர்.
எனினும் அவை வெற்றிபெறவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ou