Breaking
Thu. Nov 14th, 2024
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே அஞ்சாத தாம், ஏனையவர்களுக்கு அஞ்சப் போவதில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாளைய தினம் நடத்த உள்ள அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
15 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவராக கடயைமாற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நியமனங்களில்  தலையீடு செய்ததில்லை எனவும், பல்கலைக்கழகங்களில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு; உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மருத்துவ சங்கம் தனக்கு தேவையான வகையில் நியமனங்களை வழங்க முயற்சிக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சில ஆண்டுகளாக மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் 40 கிராம வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்தவே அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமச்சரை பணி நீக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post