ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ளதன் மூலம் பொது பல சேனாவின் முகத்திரை கிழிந்துள்ளதாகவும், அதன் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாகவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே தம்முடைய ஆதரவு என்று பொது பல சேனா நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது. அதனையடுத்து, மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது பலசேனா ஆதரவளிப்பது தொடர்பாக எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அவர்களின் முடிவு எமக்கு முக்கியமில்லாத காரணத்தினாலேயே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.