முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக போலியான முறையில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு விஜயம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு பொலிஸ் நிலையங்களில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்தவை கைது செய்யுமாறு முறைப்பாடுகளில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த முறைப்பாடு செய்தவர்களின் சிலரது முகவரிகள் போலியானது என்பது மலேசிய பொலிஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பொய்யான முறைப்பாடு செய்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய பொலிஸார் கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.