முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு தொடர்ந்திருந்த வழக்கொன்றை நேற்று வாபஸ் (5) பெற்றுக் கொண்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சில் அனுட்டானங்களுக்கான துணிகளை விநியோம் செய்யும் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தார்.
பொதுமக்களின் வரிப்பணத்தை துஷ்பிரயோகம் செய்து குறித்த துணிவிநியோக பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் பெப்ரல் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே. ஸ்ரீபவன் மற்றும் அனில் குணரத்தின ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பெப்ரல் அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறித்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
நீதிபதிகளும் அதற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளன.