18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிடமுடியுமா முடியாதா என்பது தொடர்பில் திறந்த விவாதத்தை உயர்நீதிமன்றத்தின் ஊடாக கோருவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிடமுடியுமா முடியாதா என்பது தொடர்பில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான ஏழு நீதியரசர்கள் கொண்ட முழுமையான குழாம் ஆராயவிருப்பதாகவும் நீதிமன்றத்தின்; வியாக்கியானம் என்பன ஜனாதிபதி காரியலாயத்துக்கு திங்கட்கிழமை எழுத்துமூலம் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. (jf)