Breaking
Mon. Dec 23rd, 2024

மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்த்து வெட்டிக் கொலை செய்­வ­தாக எனக்கு தொலை­பேசி மூலம் மரண அச்­சு­றுத்தல் விடுப்­ப­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­
பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார்.
இது தொடர்­பாக பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளேன் எனவும் தெரி­வித்தார்.

தேசத்தை பாது­காக்கும் ஒன்­றியம் நேற்று
கொள்­ளுப்­பிட்டி பேர்ல் சிட்டி ஹோட்­டலில் ஏற்­பாடு செய்­தி­ருந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

வெலி­கம பகு­தியில் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து தேர்தல் பிர­சாரம் மேற்­கொண்டு விட்டு அவ­ருடன் தங்­காலையில் உள்ள கால்டன் இல்­லத்­துக்கு சென்றேன். அந்த நேரத்தில் என்­னு­டைய கைப்­பே­சிக்கு 0752266588, 0718628364, 0758388276 போன்ற இலக்­கங்­களில் இருந்து அழைப்­புகள் வந்­தன.

அதில் அவர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்ந்து என்னை வெட்டிக் கொலை செய்­வ­தா­கவும் இறந்து போன என்­னு­டைய பெற்­றோர்­களை தூஷித்தும் மிரட்­டினர்.

உடனே இது தொடர்­பான முறைப்­பாட்டை ஆரம்­பத்தில் தங்­கலை பொலிஸில் பதிவு செய்தேன். அத்­துடன் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அறி­யப்­ப­டுத்­தினேன். தற்­போது பாதாள கோஷ்­டி­யினர் பர­வ­லாக சுற்­றித்­தி­ரி­கின்­றனர். நான் ஒரு­போதும் மர­ணத்­துக்கு அஞ்­ச­வில்லை.

இஸ்­லாத்தைப் பற்றி முழு­மை­யாக அறி­யாத அறி­வில்­லாத சிலரே இவ்­வா­றான காரி­யங்­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.
மேலும் இவர்கள் முஸ்லிம் எனக்­கூ­றிக்­கொண்டு ஒரு மனி­தனை கொலை செய்­வ­தாக கூறு­வது மிகப்­பெ­ரிய பாவ­மாகும்.

இவர்கள் என்­னதான் அச்­சு­றுத்தல்
விடுத்­தாலும் என்­னு­டைய மரணம் அல் லாஹ்வின் நாட்டம் படியே இடம்பெறும். சிலவேளை எனக்கு முன் இவர்களை அல் லாஹ் நாடினால் மரணிக்கச் செய்வான் என்றார்.

Related Post