Breaking
Sun. Dec 22nd, 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு ஏனைய சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய மெகசின் சிறைச்சாலையில் ஈ பிரிவில் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூங்குவதற்கான துணி மட்டும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இதே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பகல் முதல் தனக்கான உணவை தனது வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post