Breaking
Mon. Nov 25th, 2024

– ஆர்.யசி –

மஹிந்த ராஜபக்ஷவை ஒரு தலைவராக கருதுவதா, அல்லது முன்னாள் ஜனாதிபதியாக கருதுவதா அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக கருதுவதா என்ற கேள்வி எழுந்துள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (3) கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கட்சியின் கொள்கையை மீறிய நபர்களை விசாரித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சியை தூய்மைப்படுத்தி மக்களின் நம்பிக்கையை வென்ற தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அடுத்த இலக்கு.

மஹிந்த ராஜபக்ஷ, தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகின்றார். அவரால் முன்னாள் ஜனாதிபதி என்ற பெயரைக்கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இத்தனை காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான ஆதரவாளர்கள் எந்தப்பக்கம் உள்ளனர் என்பதில் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தவர்களுக்கு இந்த மேதினக் கூட்டம் நல்லதொரு பதிலாக அமைந்திருக்கும்.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ, தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகின்றார். அவருடன் இருக்கும் பிழையான கூட்டணியின் கதைகளை கேட்டும், தவறான முடிவுகளை எடுத்தும் அவர் தோற்றுப்போனமை இன்று அவருக்கே வருத்தமளிக்கலாம்.

ஆனால், காலம் கடந்துள்ளது. இப்போது அவரால் முன்னாள் ஜனாதிபதி என்ற பெயரைக்கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவரை இன்று ஒரு தலைவராக கருதுவதா, அல்லது முன்னாள் ஜனாதிபதியாக கருதுவதா அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக கருதுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலைமை ஏற்படவும் அவர் பாதளத்தில் விழவும் அவருடன் இருக்கும் கூட்டணியே காரணமாகும். அதை இப்போதாவது அவர் விளங்கிக்கொள்ள வேண்டும் என அவர்  மேலும் தெரிவித்தார்.

By

Related Post