Breaking
Thu. Dec 26th, 2024

மீண்டும் கள­மி­றங்­கி­யுள்ள மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆகஸ்ட் 18 ஆம் திக­தி­யுடன் அடி­யோடு ஒழித்து குழி தோண்டி புதைக்க ஆத­ரவு வழங்­கு­மாறு மக்­களை கோரு­கின்றேன். மஹிந்­தவை அடி­யோடு துடைத்தெ­றி­வதை உறு­திப்­ப­டுத்­துங்கள். என்று பிர­த­மரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­ வ­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். மஹிந்த ராஜ­பக் ஷ இந்த நாட்டை 10 வருடங்கள் ஆட்சி செய்தார். ஆனால் மக்­களை பற்றி சிந்­திக்­க­வில்லை. கல்­வித்­துறை சுகாதாரத் துறை வீழ்ச்சி கண்­டது. நாடு கடன் சுமையால் வாடி­யது. ஊழல் தலை­வி­ரித்­தா­டி­யது. மஹிந்த மக்­களைசிந்­திக்­க­வில்லை. கண்டி பெர­ஹெ­ரவை நிறுத்­தி­விட்டு கார் பந்­தயம் நடத்­தினர் என்றும் பிர­தமர் குறிப்­பிட்டார்.

கண்­டியில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

முன்னாள் எம். பி. க்களான லக்ஷ்மன் கிரி­யெல்ல ராஜித்த சேனா­ரட்ன கருஜசூரிய கபிர் ஹஷீம் சுவாமி நாதன் சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் என பலர் இந்த முத­லா­வது கூட்­டத்தில் கலந்­து­கொண்­டனர்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

ஜன­வரி எட்டாம் திகதி நான் கூறி­யதை கேட்டு நாட்டில் புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­னீர்கள். எமக்கு அர­சாங்­கத்தை பெற்றுத் தந்­தீர்கள். நாங்கள் 100 நாள் திட்­டத்தைக் கொண்டு: பல வேலைத்­திட்­டங்­களை செய்தோம். நாட்டில் மீண்டும் இன மத ஒற்­றுமை ஏற்­பட்­டது. வௌ்ளை வான் கலா­சாரம் முடி­வுக்கு வந்­தது. சிங்­கள தமிழ் முஸ்லிம் மற்றும் பௌத்த இந்து கிறிஸ்­தவ மற்றும் இஸ்லாம் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ ஆரம்­பித்­தனர்.

முக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கினோம். சலு­கை­களை வழங்­கினோம். ஆத்­துடன் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தைக் கொண்­டு­வந்தோம். 20 ஆவது திருத்­தத்தை கொண்­டு­வர முயற்­சித்தோம். ஆனால் முடி­ய­வில்லை. காரணம் பாரா­ளு­மன்­றத்தில் மஹிந்த ராஜ­க்ஷ­வின கை மீண்டும் ஓங்க ஆரம்­பித்­தது.

எனவே தான் ் ஜன­வரி எட்டாம் திகதி பெற்ற வெற்­றியை உறு­தி­ப­டுத்­து­வ­தற்­காக நாங்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்­துள்ளோம். புதிய கூட்­ட­ணியில் யானை சின்­னத்தில் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றோம். ஜன­வரி எட்டாம் திகதி எமக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தைப்­போன்று 18 ஆம் திக­தியும் ஆத­ரவு வழங்­குங்கள்.

நான் கண்டி மாவட்­டத்தை மறக்­க­வில்லை. அடுத்த ஐந்து வரு­டங்­களில் கண்டி மாவட்­டத்தை சிறந்த அபி­வி­ருத்தி அடைந்த மாவட்­ட­மாக மாற்­றி­ய­மைப்பேன். எமது அபி­வி­ருத்தி திட்டம் உங்­களை பலப்­ப­டுத்தும். ஆனால் ராஜ­ப­க்ஷவின் அபி­வி­ருத்தி திட்டம் ராஜ­பக்ஷ குடும்ம்­பத்தை பலப்­ப­டுத்தும் என­ப­தனை மறக்­க­வேண்டாம்.

எனவே இது தீர்க்­க­மான தேர்­த­லாகும். மஹிந்த ராஜ­பக்ஷ இந்த நாட்டை 10 வரு­டங்கள் ஆட்சி செய்தார். ஆனால் மக்­களை பற்றி சிந்­திக்­க­வில்லை. கல்­வித்­துறை சுகா­தார துறை வீழ்ச்சி கண்­டது. நாடு கடன் சுமையால் வாடி­யது. ஊழல் தலை­வி­ரித்­தா­டி­யது. முஹிந்த மக்­களை சிந்­திக்­க­வில்லை. கண்டி பெர­ஹெ­ரவை நிறுத்­தி­விட்டு கார் பந்­தயம் நடத்­தினர்.

நான் எதி­ர­வரும் 5 வரு­டங்­களில் 10 இலட்சம் தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­குவென். ஏனக்கு இதில் அனு­பவம் உள்­ளது. ஜே. ஆர். ஜய­வர்த்­தன மற்றும் பிரே­ம­தாச ஆகி­யோ­ருடன் வேலை செய்­துள்ளேன். நூட்டில் 45

கைத்­தொழில் வர்த்­தக பிர­தே­சங்­களை உரு­வாக்­குவென். துற்­போது குரு­ணாகல் மாவட்­டத்­துக்கு உலகின் மிகப் பெரிய வாகன உற்­பத்தி நிறு­வ­ன­மான வொக்ஸ் வோகன் நிறு­வ­னத்தின் தொழிற்­சா­லையை கொண்­டு­வந்­துள்ளேன்.

ஊழலை ஒழிப்­ப­தற்கு ஐக்­கிய நாடு­களின் ஊழல் ஒழிப்பு சாச­னத்தை இலங்­கையில் சட்­ட­மாக்­குவேன். ஊழலை ஒழிக்க அமெ­ரிக்கா இந்­தியா ஐரொப்­பிய ஒன்­ற­ழய நாடுகள். துற்­போது எமக்கு உத­வு­கின்­றன. எதி­ர­வரும் ஆகஸ்ட் 18 ஆம் திக­திக்கு முன் கண்டி அதி­வெக நெடுஞ்­சா­லையின் நிர்­மாணப் பணி ஆரம்­ப­மாகும்.

எனவே மீண்டும் கள­மி­றங்­கி­யுள்ள மஹிந்த ராஜ­ப­க்ஷவை ஆகஸ்ட் 18 ஆம் திக­தி­யுடன் அடி­யோடு ஒழித்து குழி தோண்டி புதைக்க ஆத­ரவு வழங்குமாறு மக்களை கோருகின்றேன். மஹிந்தவை அடியோடு துடைத்தெறிவதை உறுதிபடுத்துங்கள்.

இந்த பிறப்பில ் ஊழல் ெ சய்கின்றவர்கள் மறுபிறப்பில் நாய்களாக பிறப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அப்படியாயின் ஐ.ம.சு.மு. வில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்யக் கூடாது. ஆவ்வாறு செய்தால் அடு்த்த பிறப்பில் அவர்கள் நல்லவர்களாக பிறப்பார்கள்

Related Post