Breaking
Tue. Mar 18th, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு பொதுமக்கள் இடம்தரக்கூடாதென சமுர்தி துறை பிரதியமைச்சர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லாட்சியை பிடிக்கவில்லை என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவர்களே மஹிந்த ராஜபக்சவை மீண்டும் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக்க முனைந்தவர்களாவர்.

எனினும் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து மைத்திரிபாலவுக்கு வாக்களித்தன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தினர் என்று அலி தெரிவித்தார்.

Related Post