Breaking
Mon. Dec 23rd, 2024

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் மத்­திய குழு எடுக்கும் தீர்­மா­னங்கள் கட்­சியின் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தும் தன்மை கொண்­டது. எனினும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்த நாட்டின் முன்னாள் ஜனா­தி­ப­தி­யாவார். எனவே ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வழி­ந­டத்­து­வது போன்று அவரை வழிநடத்த முடி­யாது. அவரை இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுகவேண்டும். ஆகவே அவ­ரது விடயத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிரத்­தி­யே­க­மான முறையில் கையாள்வார் என திறன் விருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று (18) காலை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஒரு கட்­சிக்கு இரு தலை­வர்கள் இருக்க முடி­யாது. எனவே இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பதவி வகிக்­கிறார். அவர் கட்­சியின் தலைமைப் பத­வி­யினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவி­ட­மி­ருந்து பறித்­தெ­டுக்­க­வில்லை. மஹிந்த ராஜபக் ஷவே தனது பதவிக் காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்னர் தேர்­தலை நடத்தி அதன் பின்னர் கட்­சியின் தலைமைப் பொறுப்பை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைத்தார்.

கடந்த காலங்­களில் எமது கட்சி உறுப்­பி­னர்­களை கிரா­மப்­பு­றங்­களில் விரட்­டி­ய­டித்­தனர். அப்­போது ஜனா­தி­ப­தியே அவர்­களை பாது­காத்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சி­யல்­வாதி மாத்­தி­ர­மல்ல. அவர் தூர­நோக்­கு­டைய இரா­ஜ­தந்­தி­ரியும் ஆவார்… எனவே கடந்த காலங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தீர்­மா­னங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­ட­வர்­களை அவர் உட­ன­டி­யாகத் தண்­டிக்­க­வில்லை. அவர்­க­ளுக்கு பல சந்­தர்ப்­பங்­களை வழங்­கினார். எனினும் தொடர்ந்தும் சந்­தர்ப்­பங்­களை வழங்­கிக்­கொண்­டி­ருக்க முடி­யாது.

ஒரு கட்­டத்தில் அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­வரும். ஹைட்பாக் கூட்­டத்தில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளையும் இவ்­வாறே நோக்க வேண்­டி­யுள்­ளது. மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மே தினக் கூட்டம் காலியில் நடை­பெ­ற­வுள்­ளது.. எனினும் மற்­று­மொரு குழு வேறொரு கூட்­டத்தை நடத்­து­வ­தற்­கான ஆயத்­தங்­க­ளையும் மேற்­கொள்­கி­றது. அவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­படும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டி வரும்.

தேசிய அர­சாங்­கத்தில் இணைந்து செயற்­பட்­டாலும் எமது கட்சி தனிக் கட்­சி­யாகும். தேர்­தலில் நாம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிடப் போவ­தில்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பா­கவே போட்­டி­யி­ட­வுள்ளோம். . ஆகவே கட்­சியின் கொள்­கை­க­ளுக்கும் தீர்­மா­னங்­களும் எதி­ராக எந்­த­வொரு உறுப்­பி­னரும் செயற்­பட இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது. அது தொடர்பில் கட்­சியின் மத்­திய குழு தீர்­மானம் ஒன்று எடுத்­துள்­ளது. அந்தத் தீர்­மானம் எதிர்­கா­லத்தில் நடை­மு­றைக்கு வரும்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு எடுக்கும் தீர்­மா­னங்கள் கட்­சியின் சகல உறுப்­பி­னர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தும் தன்மை கொண்­டது. எனினும் மன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷவின் விட­யத்தை பிரத்­தி­யே­க­மாகக் கையாள வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் அவர் நாட்டின் முன்னாள் ஜனா­தி­பதி மாத்­தி­ர­மல்ல, கட்­சியின் முன்னாள் தலை­வ­ரு­மாவார். எனவே ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வழி­ந­டத்­து­வது போன்று அவரை வழி நடத்த முடி­யாது. அவரை பிரத்­தி­யே­க­மான முறையில் இரா­ஜ­தந்­திர ரீதியில் அனுக வேண்டும். ஆகவே அவ­ரது விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கையாழ்வார்.

தேசிய அர­சாங்­கத்­தி­னூ­டாக பாரியளவானஅபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கு அரசியல் பேதங்களுக்கப்பால் நின்று சகலரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் இந்த அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வில்லையென சிலர் விமர்சித்தனர். ஆனால் தற்போது அபிவிருத்திக்கான நிதி சகல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. எனவே விரைவில் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகும் என்றார்.

By

Related Post