Breaking
Tue. Dec 24th, 2024
மரத்திலிருந்து வீழ்ந்த மஹிந்தவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தகிதி யானைத் தாக்கும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டம் எனது பிறந்த ஊராகும், கம்பஹாவிற்கு நான் பரசூட் மூலம் குதிப்பது மாவட்டத்தை சுத்தப்படுத்தவே தவிர கொள்ளையடிப்பதற்கு அல்ல.

குட்டி ரோமபுரியை அழிவடையச் செய்தது யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கடந்த காலங்களில் மக்கள் பணத்தில் கை வைக்காத காரணத்தினால் நாடாளுமன்றில் ஊமை போன்று செயற்படவில்லை.

நாட்டில் நிலவிய சட்டம் ஒழுங்கீனங்களுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தலை கருத்திற்கொள்ளாது எதிர்க்கட்சியிலிருந்து குரல் கொடுத்தேன்.

பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தைரியமாக குற்றச் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க என்னை அரசியலுக்கு கொண்டு வந்த இரத்தினபுரி மக்களுக்கு நான் கடனில்லை. .

இரத்தினபரி மாவட்ட மக்களுக்கு நான் செய்த மிகப் பெரிய சேவை, களவெடுக்காமல் இருந்தமையாகும்.

நாம் ஜனவரி மாதம் 8ம் திகதி அடைந்த வெற்றியுடன் மஹிந்த மரத்திலிருந்து வீழந்தார். ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி குருணாகலில் மஹிந்தவை மாடு முட்டாது, யானையே தாக்கும் என ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் புலத்கொஹோபிட்டியவில் தெரிவித்துள்ளார்.

மரம் ஏறி விழ்ந்தவனை மாடு முட்டிய கதை என்பதற்கு நிகரான சிங்கள பழமொழியை அடிப்படையாகக் கொண்டு ரஞ்சன் ராமநாயக்க, மஹிந்தவின் தேர்தல் தோல்வி குறித்து ஆரூடம் கூறியுள்ளார்.

Related Post