Breaking
Sun. Dec 22nd, 2024

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இறுதிநாளான இன்று பாதயாத்திரை கொழும்பை வந்தடையவுள்ள நிலையில் பொதுக்கூட்டத்துக்கான மைதானம் எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் கண்டியிலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை இன்று கொழும்பை வந்தடையவுள்ளது.

காலை ஒன்பது மணியளவில் கிரிபத்கொடை நகரில் இருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை கொழும்பை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் கூட்டு எதிர்க்கட்சி முன்னர் தீர்மானித்திருந்தது.

அதற்காக வாசுதேவ நாணயக்கார பெயரில் கொழும்பு ஹைட்பார்க் மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறும் அவசர பராமரிப்பு வேலைகள் காரணமாக குறித்த மைதானத்தை கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து கொழும்பில் உள்ள முக்கிய பத்து மைதானங்களைக் குறிப்பிட்டு அவற்றில் ஒன்றை ஒதுக்கித் தருமாறு கூட்டு எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை முடிவில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு மைதானம் இல்லாத சிக்கலில் அதன் ஏற்பாட்டாளர்கள் கடுமையான நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளனர்.

By

Related Post