Breaking
Thu. Nov 14th, 2024

பாரா­ளு­மன்­றத்தில் பொது எதி­ர­ணி­யாக சுயா­தீ­ன மாக செயற்ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்­டு­மென கோரிக்கை விடுத்த மஹிந்த அணி­யி­னரின் வேண்­டு­கோள் சபா­நா­ய­க­ரினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மஹிந்த ஆத­ரவு அணி எம்.பிக்கள் சபை மத்­தியில் வந்து கூச்சல் குழப்­பத்தில் ஈடு­பட்­டனர்.

இக்­கூச்சல் குழப்­பத்­திற்கு மத்­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் முன்­வைத்த உள்­ளூ­ராட்சி சபை­கள் தேர்தல் திருத்த சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது.

52 எம்.பிக்கள் கையெ­ழுத்­திட்டு இணைந்த பொது எதி­ர­ணி­யாக பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்­கான கடிதம் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட போதும் அதற்கு இது­வ­ரையில் பதில் கிடைக்­க­வில்லை. எனவே இதற்கு இன்றே பதில் வேண்­டு­மென மஹிந்த அணி ஆத­ரவு எம்.பிக்­க­ளான தினேஷ்­கு­ண­வர்த்­தன, விமல் வீர­வன்ச, வாசு­தேவ நாண­யக்­கார, பந்­துல குண­வர்­தன ஆகியோர் சபையில் கருத்­துக்­களை வெளி­யிட்­டனர்.

இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தனது கருத்­துக்­களை வெளி­யிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் ஒரு எதிர்க்­கட்சி தான் இருக்க முடியும். அதற்கு மேல­தி­க­மாக எதிர்க்­கட்சி இருக்­க­மு­டி­யாது என்று பிரதமர் தெரிவித்தார்.

இவ்­வாறு மஹிந்த அணி­யி­ன­ருக்கும் அரசு தரப்­பி­ன­ருக்கும் இடையே இது விடயம் தொடர்பில் கார­சா­ர­மான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் சபையில் இடம்­பெற்­றது. இதன் போது இரு தரப்­பிலும் கூச்­சல்கள் தலை­தூக்­கின.

இந்­நி­லையில் சபா­நா­யகர் தனது தீர்ப்பை வழங்கும் போது, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை அழிக்கும் பாவத்­திற்கு என்னால் பங்­கா­ளி­யாக முடி­யாது எனத் தெரி­வித்தார்.

இதன் போது மஹிந்த அணி ஆத­ரவு எம்.பி.க்கள் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி தலை­மையில் சபா மண்­ட­பத்தில் நடுவே வந்து கூச்சல் குழப்­பத்தில் ஈடு­பட்­டனர்.

சரி­யாக பிற்­பகல் 2.00 மணியளவில் இவ்­வாறு சபை நடுவில் நின்று கொண்டு கூச்சல் இட்­டனர். இணைந்த எதிர்க்­கட்­சியின் உரி­மையை வழங்குமாறு அவர்கள் ஒன்றிணைந்து கூச்­ச­லிட்­டனர்.

இதன் போது உறுப்பினர்கள் செங்­கோலை தூக்க முயற்­சித்­தபோதும் படைக்­கல சேவி­தர்கள் அதற்கு இட­ம­ளிக்க­வில்லை.

இதன் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளூ­ராட்சி சபை­களின் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் தனது உரையை ஆரம்­பித்தார்.

பிர­த­ம­ருக்கு ஒலி­வாங்கி முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்­தது. பிர­தமர் தனது உரையை நிறுத்­தாமல் தொடர்ந்தார்.

அதே­வேளை எதிர்த்­த­ரப்பு எம்.பி.க்களின் கூச்சல் குழப்பம் இடம்­பெற்ற வண்ணம் இருந்­தது. எம்.பிக்­க­ளான தினேஷ்­கு­ண­வர்த்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, நாமல் ராஜபக் ஷ, ஹெக­லிய ரம்­புக்­வெல உட்­பட மஹிந்த சார்பு எம்.பி.க்­க­ள் பலர் கூச்சல் குழப்­பத்தில் ஈடு­பட்­டனர்.

இதில் ஒரே­யொரு பெண் எம்.பியான பவித்ரா வன்­னி­யா­ராச்­சியும் கலந்து கொண்­டி­ருந்தார்.

ஆனால் பிர­தமர் இடை­வி­டாது தனது உரையை நிகழ்த்திக் கொண்­டி­ருந்தார்.

பிர­த­மரின் உரையின்போது உள்­ளூ­ராட்சி சபை­களில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­பதை எதிர்த்து எதிர்த்­த­ரப்­பினர் சபை மத்­தியில் கூச்­ச­லிட்­டனர்.

இதற்கு ஆத­ர­வாக பெண் எம்.பி.யான பவித்ரா வன்­னி­யா­ராச்­சியும் குரல் எழுப்பினார்.

எதி­ர­ணி­யினரின் இக் கூச்சல் குழப்­பத்­திற்கு மத்­தியில் ஆளுந்­த­ரப்பில் அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, சந்­தி­ராணி பண்­டார, அனோமா கமகே, ஜயந்த கரு­ணா­தி­லக, அகி­ல­விராஜ் காரி­ய­வசம் போன்ற ஆளுந் தரப்­பினர் கைதட்டி ஆர­வாரம் செய்­தனர்.

பிர­த­மரின் உரைக்குப் பின்னர் உள்­ளூ­ராட்சிச் சபை தேர்தல் திருத்த சட்­ட­மூலம் மீது அமைச்­சர்­க­ளாக சத்­தி­ராணி பண்­டார, அனோமா கமகே, பைசர் முஸ்­தபா மற்றும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு எம்.பி. மாவை சேனா­தி­ராஜா ஆகியோர் சபையில் கூச்சல் குழப்­பத்­திற்கு மத்­தி­யிலும் உரை­யாற்­றி­னார்கள்.

இதன்­போது அவர்­க­ளுக்­கான ஒலி­வாங்கி முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்­தது.

இதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார பேச முயற்­சித்த போது, எழுந்து நின்ற சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல இரண்டாம், மூன்றாம் வாசிப்­புக்­க­ளிற்­கான அறி­விப்பை விடுத்தார். பின்னர் இரு திருத்­தங்கள் அறி­விக்­கப்­பட்­டன.

ஜே.வி.பியின் எம்.பி. அநுரகுமார திசாநாயக்க திருத்தத்தை முன்மொழிந்திருந்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இறுதியில் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் அரசாங்கத்தின் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்ட மூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

மாலை மூன்று மணிக்கு சபை அடுத்த நாள் (இன்று) புதன்கிழமை நண்பகல் 1.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

By

Related Post