Breaking
Mon. Dec 23rd, 2024

எனக்கு எதி­ராக பாரிய சதித்திட்டம் ஒன்று கூட்டு எதிர்க்கட்சி பக்கம் இருந்து முன்­னெடுக்­கப்­ப­டு­கிறது. அரச சாட்சியா­க மாறுவதற்கு நான் குற்­ற­வா­ளியல்ல. பாம்பின் கால் பாம்­ப­றி­வது போன்று மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் கட­மையை தவிர வேறு ஒன்றும் நான் செய்யவில்லை என்று முன்னாள் வெளிவிவகார கண்­கா­ணிப்பு எம்.பி. சஜின் டி வாஸ் குண­வர்­த் தன தெரி­வித்தார்.

ஊட­கங்கள் எனக்கு எதி­ராக பாரிய குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வி­த­மான அடிப்­படை தன்­மை­யு­மின்றி முன்­வைக்­கின்­றன. அவ்­வாறு

பாரி­ய­ள­வி­லான குற்­றத்தை நான் செய்­தி­ருந்தால் என்னை சிறை­யி­லிட்­டி­ருப்­பார்கள். எனவே, ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக குற்­ற­வியல்

அவ­தூறு சட்டம் கொண்­டு­வ­ரப்­பட வேண் டும் எனவும் சஜின் டி வாஸ் குண­வர்த்­தன குறிப்­பிட்டார்.

சஜின் டி வாஸ் குண­வர்த்­த­னவின் விசேட ஊடக சந்­திப்பு நேற்று வெள்ளிக்­கி­ழமை இராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள அவ­ரது இல்­லத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.்

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

அமை­தி­யாக தொடர்ந்தும் இருக்கும் போது

என்னை கடு­மை­யாக தாக்­கு­கின்­றனர். பணம் கொள்­ளை­ய­டித்­துள்­ள­தாக

ஊட­கங்­களில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஸ்ரீலங்கன் விமான சேவையில் மோசடி செய்­த­தா­கவும் கூறு­கின்­றனர். ஆனால் இவை எதையும் உறு­திப்­பட கூறு­வ­தில்லை . வெறு­மனே குற்­றச்­சாட்­டுக்­க­ளாக முன் வைக்­கின்­றனர். இது நியா­ய­மில்லை. விமல் வீர­வங்ச மற்றும் உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள் மிகவும் மோச­மாக செயற்­பட்டு மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பெயரில் அர­சியல் செய்­கின்­றனர். இவர்­க­ளுக்கு தனித்து போட்­டி­யிட்டு வெற்றிப் பெற முடி­யாது . வெற்­றி­லையை விட்டு சென்றால் யாருக்கும் எதிர்­காலம் இல்லை.

ஊட­கங்­களின் அனைத்து கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளிக்­கவே நான் இன்று உங்­களை சந்­திக்­கின்றேன். எனக்கு எதி­ராக சதி செய்­யப்­ப­டு­கின்­றது. இதனை ராஜ­பக்ஷ ஒருவர் தான் பின்­னின்று இயக்­கு­கின்றார். 87 வங்கி கணக்குள் எனக்கு காணப்­ப­டு­வ­தாக கூறு­கின்­றனர். அதில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை.குற்றம் செய்­தி­ருந்தால் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருப்­பேனே தவிர உங்கள் முன் வந்­தி­ருக்க மாட்டேன். குற்­ற­வியல் திணைக்­களம் மற்றும் நிதி மோச­டிகள் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு இவற்றில் எனக்கு எதி­ராக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே நான் நானாக இருக்­கின்றேன். குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­ற­வை­யாகும்.

கடந்த ஆட்­சியில் எனது கட­மையை சரி­வர செய்­துள்ளேன். எனவே நான் அச்சம் கொள்ள தேவை­யில்லை. ஆனால் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தோல்­விற்கு நான் காரணம் என கூறி­னார்கள். அதில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை. ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த பின்னர் மஹிந்த ராஜ­பக்ஷ குரு­நாகல் மாவட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக போட்­டி­யிட்­ட­மையை நான் விரும்ப வில்லை. ஆனால் கூட்டு எதிர் க் கட்சி என கூறிக் கொண்டு போலி­யாக செயற்­ப­டு­கின்­றனர். அப்­ப­டி­யொரு கட்­சியே கிடை­யாது . நான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் அர­சி­யலில் ஈடு­ப­டுவேன். அதற்­கான அனு­ம­தியை மக்கள் எனக்கு வழங்­கி­யுள்­ளார்கள். கடந்த பொது தேர்­தலில் எனக்கு வேட்பு மனு வழங்­கப்­பட வில்லை. இதன் பின்னணியில் சதி காணப்­பட்­டது. தற்­போதுஅந்த சதி திட்டம் வெ ளிப்படத் தொடங்கி விட்­டது. காலி மேதின கூட்­டத்­திற்கு சென்றேன். விமல் வீர­வங்க கூறு­வது போன்று கிரு­லப்­ப­னைக்கு நான் சென்­றி­ருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

கிறிஸ் நோனிசை தாக்­கி­ய­தாக கூறு­கின்­றனர். ஆனால் அது வெறும் வாக்­கு­வாதம் மாத்­தி­ரமேயாகும். உண்­மைக்கு முர­ணான தக­வல்­களை வெ ளியிட்டு அநா­வசி­ய­மாக பிரச்சினை­யை வளர்த்­தது ஊடங்கள் தான். யானை குட்டி எனது வீட்டில் இருந்­தது. ஆனால் அதற்கும் எனக்கும் தொடர்பில்லை. சட்ட ரீதியாக பெற்றுக் கொண்டவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து பிரச்சினையை தீர்த்துக் கொண்டார்கள். ஆனால் பாதிக்கப்பட்டது நான் தான். எனவே என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் நீதி மன்றில் நீதியை பெற்றுக் கொள்கின்றேன். எனக்கு எதிராக தீட்டப்படும் சதிக்கு காரணத்தை கண்டறிய வேண்டியது அவசியமாகும் என்றார்.

By

Related Post