எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார்.
- நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்…
- ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது…
- சட்டம் சீர்குழைந்துள்ளது…
- யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது…
- அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்…
- 2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்… ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் யுத்தம் செய்ததில் முழு நாடே கடனாளியாகியுள்ளது…
- 2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது…
- 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார்…
- 1974 – 1994 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார்…
- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது…
-
- வரலாறு எனக்கு தந்த பரிசு…
- ரணில், சந்திரிகா ஆகியோருக்கு நன்றிகள்…
- சு.க.வை பலப்படுத்த வேண்டும்…
- போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் சந்தித்தேன்…
- நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது…
- இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை…
- பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன்…
- சகலதையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன்…
- நாட்டின் நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது…
- அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்…
- அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும்…
- இளைஞர் பிரச்சினைகளுக்கு தீர்வு…
- சுதந்திர தேர்தல் உரிமையை உருவாக்குவேன்…
- இது கூட்டமைப்பின் ஒரு முன்னணி…