எதிர்வரும் சில தினங்களில் அரசிலி ருந்த மேலும் 50 வீதமானோர் வெளி யேறவுள்ளதாக நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறி ஐக்கியத் தேசியக் கட்சிக்குள் இணைந்து கொண்ட அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் அமைச்ச ரான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு, “”அரசிடம் என் சம்பந்தப் பட்ட “பைல்கள்’ (ஆவணங்கள்) இருக் குமானால் 24 மணித்தியாலங்களி லேயே அதனை வெளியிட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசிலிருந்து வெளியேறிய நுவ ரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரான நவீன் திஸாநாயக்க நேற்று மதியம் ஐக்கியத் தேசியக் கட்சித் தலை மையகத்திற்கு வருகைத் தந்திருந்தார். கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதர வாளர்களின் பலத்த வரவேற்பிற்கு மத்தியில் சிறிகொத்தவிற்கு வருகைத் தந்த இவர்,அங்கு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கொண்டே மேற்கண்டவாறு தெரிவித் தார்.
மேலும், தனது தாய் வீட்டிற்கு மீண்டும் வருவதை எண்ணி மிகவும் சந்தோமடைவதாகவும் அவர் தனது மகிழ்ச்சியை இதன்போது தெரிவித் தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கை யில்,
“இந்த நாள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாக கருதப்படு கின்றது. மக்களின் குறைகளை போக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி பொது வேட்பாளரான மைத் திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றுவதை எண்ணியும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
மைத்திரிபால சிறிசேனவை நுவ ரெலிய மாவட்டத்தில் வெற்றியடையச் செய்வேன் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.
இது எனது அப்பாவின் கட்சி. நான் அரசியலில் அடியேடுத்து வைத்தக் கட்சி. இக்கட்சிக்குள் மீண்டும் இணைந்து கொண்டுள்ளமையானது எனது தாய் வீட்டிற்கு வந்ததைப் போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத் திரிபால சிறிசேன ஆகிய இரு தலை வர்களும் ஊழலுக்குத் துணைப் போகாத அரசியல்வாதிகள். இவர்க ளுடன் இணைந்து எதிர்காலத்தில் சிறந்த மக்கள் பணியாற்றுவேன் என இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கி றேன்.” என்றார்.
அதேநேரம், “”நிறைவேற்று அதி காரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். நுவ ரெலிய மாவட்ட மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்தவுடன் கலந்துரை யாடி தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பல தடவைகள் முயற் சித்தேன்.
ஆனால், நான் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிவடைந் தன. மலையகத்திலுள்ள தமிழ்த் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் சில அதிகாரங்கள் எமக்கு வழங்கப்படு வதில்லை.
இதுதொடர்பிலும் ஜனாதிபதியின் கவணத்திற்கு கொண்டு சென்றேன். இதிலும், எந்தப் பயனுமில்லை. சி.பி. ரத்நாயக்கவுக்கும் இதே நிலைமையில் தான் அங்கு சேவையாற்றிக் கொண்டி ருக்கிறார்.
இதுபோன்ற அதிருப்திகளின் கார ணமாகவே நான் அரசிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட் டது. 2007 ஆம் ஆண்டு நான் இணைந்த போது இருந்த அரசல்ல தற்போது இருப்பது.
மாறாக இந்த அரசுக்குள் ஊழல், துஷ்பிரயோகம் என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவ்வாறான அரசி லிருந்து வெளியேற இன்னும் பலர் தயாராகவே இருக்கின்றனர்.
எதிர்வரும் காலங்களில் மேலும் 50 வீதமானோர் அரசிலிருந்து வெளியேர வுள்ளார்கள். இவர்களுடன் இணைந்து எமது ஜனநாயக பயணத்தை தொடர் வோம்” என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, என் சம்பந்தப்பட்ட பைல்களை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் வைத்திருப்பாராயில் 24 மணித் தியாலங்களுக்குள்ளேயே அதனை வெளியிட வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில், பைல்களை தன் வசம் வைத்துக் கொள்வது சட்ட விரோதமா னது” என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. (os)