Breaking
Sun. Dec 22nd, 2024

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ளும் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. தலை­மை­யி­லான மஹிந்த ஆத­ரவு அணி­யி­ன­ருக்கு இது­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­க்கட்சி அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வில்லை.

எனவே தற்­போது அவர்கள் ஜெனிவா அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தில் முறை­ப்பாடு செய்­வதால் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் எதிர்­கால செயற்­பா­டு­க­ளுக்கு எந்த விதத்­திலும் முட்­டுக்­கட்­டை­யிட முடி­யா­தென நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்தார்.

ஒன்­றி­ணைந்த எதிர்­க்கட்­சி­யினர் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தமக்­கான அந்­தஸ்து வழங்­கப்­ப­டாமை தொடர்பில் முறை­ப்பாடு செய்­வ­தற்­காக ஜெனிவா சென்­றுள்­ளமை குறித்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தம்மை எதிர்­க்கட்­சி­யி­ன­ராக அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்ற கோரிக்­கையை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­த்தன தலை­மை­யி­லான மஹிந்த ஆத­ரவு அணி தொடர்ந்தும் முன்­வைத்து வந்­தது.

அதேபோல் கடந்த காலத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் ஜெனிவாவின் உத­வியை நாடி­யி­ருந்­தமை குறித்து இவர்கள் தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அர­சாங்­கத்தை ஜெனிவா செல்ல வேண்டாம் என கூச்­ச­லிட்­ட­வர்கள் தமக்கு நியாயம் கோரி ஜெனிவா சென்­றி­ருப்­பது வேடிக்­கை­யா­னது.

ஆட்சி மாற்­றத்தின் முன்­னரும் பின்­னரும் இந்த எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்கு ஜெனிவா சர்­வா­தி­கா­ரத்தின் கோட்­டை­யாக தென்­பட்­டது. அதற்­காக நல்­லாட்சி அர­சாங்­கமும் ஜெனிவா­வு­ட­னான உறவை துண்­டிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தினர். இந்­நி­லையில் தற்­போது இவர்கள் ஜெனிவா சென்­றுள்­ளனர். இதி­லி­ருந்து இவர்­களின் நிலைப்­பாட்டை விளங்­கிக்­கொள்ள முடி­கி­றது.

எவ்­வா­றா­யினும் எந்த ஒரு நாட்­டி­னதும் எதிர்க்­கட்­சி­யினர் தமது உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்தி முறை­ப்பாடு செய்தால் குறித்த முறைப்­பாடு தொடர்பில் தீர்க்­கமாக ஆரா­யப்­படும். அது போன்று தற்­போது ஜெனிவா சென்­றுள்ள எமது நாட்டு தரப்­பி­னரின் குற்­றச்­சாட்டு தொடர்­பிலும் ஆரா­யப்­ப­டுமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

ஏனெனில் இது­வ­ரையில் இந்த தரப்­பினர் எமது நாட்டு பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்கட்­சி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. அதனால் இவர்­களின் முறை­ப்பாடு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டாலும் இது தொடர்பில் பெரிதும் ஆரா­யப்­ப­டாது என்­பதே எமது நிலைப்­பாடு. அத்­துடன் இது­வ­ரையில் இவர்கள் ஒரு கட்­சியை உரு­வாக்­கவும் இல்லை. புதிய கட்­சி­யொன்றை உரு­வாக்­கி­னாலும் அந்தக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பை பார்க்கிலும் வலியதாக இருக்க வேண்டும். அவ்வாறான கட்சியை அவர்கள் உருவாக்கும் சாத்தியமும் தற்போதைக்கு இல்லை. எனவே இவர்களின் ஜெனிவா பயணம் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்கு முட்டுக்கட்டையிடுவதாக அமையாது என்றார்.

By

Related Post