Breaking
Mon. Dec 23rd, 2024

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எங்கே? ஏன் அவர் வரவு செலவுத் திட்ட விவா­தத்தில் கலந்து கொள்­ள­வில்லை என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார ஜய­மகே நேற்று பாரா­ளு­மன்­றத்தில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்­வி­யெ­ழுப்­பினார்.

நளின் பண்­டார எம்.பி. இவ்­வாறு கேள்­வி­யெ­ழுப்­பி­ய­தை­ய­டுத்து ஆளும்­கட்­சி­யினர் ஊ சத்தம் எழுப்பி மேசையில் தட்­டினர். இதே­வேளை மஹிந்த ஆத­ரவு அணி­யி­னரும் கூச்­ச­லிட்­டனர். அத்­துடன் பலத்த சிரிப்பொலியும் எழுந்­தி­ருந்­தது.

வரவு–செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்ட கடந்த 20 ஆம் திகதி முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பார­ாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ சபையில் சமு­க­ம­ளித்­தி­ருந்தார்.

எனினும் கடந்த 21 ஆம் திகதி சனிக்­கி­ழமை முதல் நேற்று புதன்­கி­ழமை வரை ஒன்­பது தினங்கள் இடம்­பெற்ற விவா­தங்களில் ஒரு தின­மேனும் அவர் பாரா­ளு­மன்­றத்தில் சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.

2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு–செலவுத் திட்­டத்தின் மீதான விவா­தத்தின் நேற்­றைய இறுதி தினம் வரையில் அவர் விவாதத்தில் கலந்துகொண்டிராத நிலையிலேயே நளின் பண்டார எம்.பி. மேற்கண் டவாறு கேள்வியெழுப்பினார்.

By

Related Post