Breaking
Fri. Nov 15th, 2024

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ ஷவை பிர­த­ம­ர் வேட்பாளராகக் கள­மி­றக்­கினால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தோற்­றுப்­போகும். தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் மஹிந்­த­வுக்குக் கிடைக்­காது.

பொதுத்­தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்கு தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை திரட்­டிக் ­கொள்ள வேண்டும் என கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க தெரி­வித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்­றுக்­காலை நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்து அவர் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தா­வது, எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ஸவை பிர­தமர் அபேட்­ச­க­ராக கள­மி­றக்கக் கூடாது என்­பதே எனது தனிப்­பட்ட அபிப்­பி­ரா­ய­மாகும். மஹிந்த ராஜ­பக்­ஸவோ அல்­லது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ ஸ்ரீலங்கா சுதந்­திக்­கட்­சியை ஒரு போதும் பிள­வு­ப­டுத்த மாட்­டார்கள். கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களை அவர்கள் நடுத்­தெ­ருவில் விட்டு விட­மாட்­டார்கள்.

மஹிந்­தவும் மைத்­தி­ரி­பா­லவும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­வர்கள்.பொதுத்­தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கு மஹிந்த ராஜ­பக்ஸ அவ­சியம் தேவைப்­ப­டு­ப­வ­ராவார்.
கடந்த ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் இழக்­கப்­பட்­ட­மையே தோல்­விக்குக் காரணம். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்கள் மஹிந்­த­வைத்­தோற்­க­டிக்க வேண்­டு­மென்­ப­தற்­காக ஆர்­வ­முடன் வாக்­க­ளித்­தார்கள். எப்­போதும் தேர்­தல்­களில் முஸ்­லிம்­களின் வாக்­க­ளிப்பு வீதம் 60 ஆகவே இருக்கும். ஆனால் கடந்த ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் 80 வீத­மான முஸ்­லிம்கள் தமது வாக்­கு­களைப் பயன்­ப­டுத்­தி­னார்கள்.

எனவே எதிர்­வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் சிறுபான்மை மக்களையும், சிறுபான்மைக் கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டே தேர்தலில் களமிறங்கவுள்ளது என்றார்.

Related Post