குழப்புகின்றார் மஹிந்த சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்த முடியாது என்கிறார் சந்திரிகா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவுகள் இல்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் கட்சியை குழப்பிய அதே அணுகுமுறையை மஹிந்த ராஜபக்ஷ தற்போதும் முன்னெடுத்து வருகின்றார். எக்காரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட
கூட்டத்திற்கு நாம் அஞ்சமாட் டோம். அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் மஹிந்த ராஜபக் ஷவின் நீண்ட நாள் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் மின்நிலையமொன்றுக்கு அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள்
ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.