Breaking
Tue. Dec 24th, 2024

– ஆர்.யசி –

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சி தலைமையகத்தில் அவசர சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று மாலை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தியிருந்த விசேட உரையினையடுத்தே மேற்படி சந்திப்பு தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் ஜன­வரி 8 ஆம் திக­திக்கு முன்னர் இருந்த வைராக்­கியம் இன்னும் எனக்கு உள்­ளது. அவருக்கு வேட்பு மனு வழங்க கொஞ்சம் கூட எனக்கு விருப்பம் இருக்கவில்லை. எனினும் கட்சி அங்கத்தவர்களின் தூண்டுதலால் தான் அவருக்கு வேட்புமனு வழங்கினேன். எனினும் எதிர்வரும் தேர்தலில் எக்காரணம் கொண்டும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால நேற்று மாலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post