Breaking
Wed. Mar 19th, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் பொய் பிரசாரம் செய்தது போதாதென்று இப்போது சர்வதேச ரீதியில் பொய் கூறுகின்றார் என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘மத்தல சர்வதேச விமான நிலையம் இன்னும் நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்தப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது தெரிவித்துள்ளார்.

ஆனால் அங்கிருந்த நெல், கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அகற்றப்பட்டு விட்டன’ என அமைச்சர் மேலும் கூறினார்.

இதேவேளை, மத்தல விமான நிலையத்தில் 4,000 மெற்றிக்தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

By

Related Post