Breaking
Mon. Dec 23rd, 2024
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கை நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட தினம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தொம்பே உடுபில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது  உரையாற்றிய அவர்,
நல்லாட்சி அரசாங்கம் மகிந்த மீது கொண்டுள்ள அச்சமே இதற்கான காரணமாகும்.நல்லாட்சி அரசாங்கம் மகிந்தவை அரசியலிலிருந்து ஒரம் கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டு வரலாற்றின் மிகவும் இருண்ட தினமாகும்.
மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் முழுக்க முழுக்க வீணடிக்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ச இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவர்.நாட்டுக்கு எதிரான சக்திகள் மகிந்தவிற்கு எதிராக சூழ்ச்சி செய்து அவரை தோற்கடித்தன.
அத்தோடு, மகிந்தவை விரட்டியடிக்கும் சூழ்ச்சித் திட்டம் இன்னமும் ஓயவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

By

Related Post