அரசு எந்த சூழ்ச்சிகளையும் செய்து வெற்றி பெற முடியாது. அவ்வாறு வெற்றி பெற முனைந்தால் பத்து லட்சம் பேரைத் திரட்டி கொழும்பை முற்றுகையிட்டு அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் அத்துலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அரசாங்கம் சர்வதேச சூழ்ச்சி என்று கூறி வாக்குகளைப் பெற முயற்சிப்பதாகவும் அவ்வாறு ஒரு சூழ்ச்சியும் இல்லை அரசிற்குள்ளேயே சூழ்ச்சிக்காரர்கள் உள்ளனர்.
இதேவேளை மகிந்தவுக்கான எதிரி அவரின் அணியிலேயே இருப்பதாகவும் பொது எதிரணியில் இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை நாட்டு மக்களிடம் கையளிக்காது விட்டால் இந்த முறையின் ஊடாகவே அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இது வன்முறையற்ற போராட்டம் என்றும் அவர் கூறினார்.