Breaking
Fri. Nov 15th, 2024

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதிரான போராட்டம் பல இலட்சம் பேரின் பங்­கு­பற்­ற­லுடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் இடம்­பெறும். எமக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். எனவே, அச்­ச­மின்றி அனைத்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் இன்­றைய எதிர்ப்புப் பேர­ணியில் கலந்­து­கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை துண்­டாட வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது. ஏனெனில், உண்­மை­யான சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் கூட்டு எதிர் கட்­சி­யி­லேயே உள்­ளனர். இந்­தியா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­களின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்து தாய் நாட்டை பாது­காப்பு மகத்­தான கட­மையை எதி­ர­ணியில் இருந்து முன்­னெ­டுப்­ப­தா­கவும் கூட்டு எதிர் கட்சி குறிப்­பிட்­டுள்­ளது.

ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று (16) இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன் போது உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே கூறு­கையில் ,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நோக்­கமும் அர­சியல் நட­வ­டிக்­கை­களும் ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்­கா­கவே அமைய வேண்டும். ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டமே தற்­போ­தைய தேவை­யா­கவும் உள்­ளது. நாட்டில் பல்­வேறு பின்­ன­டை­வுகள் ஏற்­பட்­டுள்­ளன. பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு நெருக்­க­டிகள் இருக்க தக்­க­தாக இந்­தி­யா­விற்கு நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை சூறை­யாட இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எரி­பொருள் விலை குறைப்பை முன்­னெ­டுக்­கா­மை­யினால் அதன் நன்மை இந்­தி­யா­விற்கு செல்­கின்­றது. ஓரு மாதத்­திற்கு 1.1 பில்­லியன் ரூபாவை எரி­பொருள் விற்­ப­னையில் இந்­தியா இலங்­கையில் இருந்து பெற்றுக் கொள்­கின்­றது. ஜன­வரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்­றத்­திற்கு செல­விட்ட பணத்தை தற்­போது இந்­தியா பெற்­றுக்­கொண்டு வரு­கின்­றது. இதனை நாட்டு மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தி நாட்டை பாது­காக்க முற்­படும் போது எமக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டாலும் அதற்கு மஹிந்த ராஜ­பக்ஷ தான் காரணம் என கூறு­கின்­றனர்.

இந்­திய அமைச்­ச­ர­வைக்கு தேவைக்­கேற்ப இலங்கை செயற்­பட வேண்­டி­ய­தில்லை. எமது இன்­றைய போராட்டம் ஐக்­கிய தேசிய கட்­சியின் தற்­போ­தைய ஆட்­சிக்கு எதி­ராக கூட்டு எதிர் கட்சி வியா­ழக்­கி­ழமை கொழும்பு – ஹைட்பார்க் மைதா­னத்தில் எதிர்ப்பு பேரணி ஒன்றை ஏற்­பாடு செய்­துள்­ளது. இந்த எதிர்ப்பு பேரணி 6 விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது . அதா­வது இந்­தி­யா­விற்கு அடிப்­ப­ணிந்து எட்கா ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­கின்­றமை , விவ­சா­யி­க­ளுக்­கான நிவா­ரண குறைப்பு , ஊடக அடக்­கு­முறை , தேர்தல் நடத்­தாமை , அர­சியல் பழி­வாங்­கல்கள் மற்றும் இரா­ணு­வத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் இந்த விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே கூட்டு எதிர் கட்சி எதிர்ப்பு பேர­ணியை ஏற்­பாடு செய்­துள்­ளது. எனவே இது முழுக்க முழக்க பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான எதிர்ப்பு பேர­ணி­யாகும்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சாங்­கத்­தினை ஆட்­சியில் இருந்து விரட்­டி­ய­டிக்கும் தேவை கூட்டு எதிர் கட்­சிக்கு உள்­ளது. அதற்கு எதி­ராக நாட்டு மக்­களை அணித்­தி­ரள வைக்க வேண்­டிய கடமை பொறுப்­புள்ள எதிர் கட்சி என்ற வகையில் எமக்­குள்­ளது. அத­னையே நாங்கள் தற்­போது முன்­னெ­டுக்­கின்றோம். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பிள­வுப்­ப­டுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனென்னல் அது எமது கட்சி . கூட்டு எதிர் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து 39 பேர் இன்று பேரணியில் கலந்துக் கொள்ள உள்ளனர். எனவே கூட்டு அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் . ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்ள தயாராகவே நாம் உள்ளோம் என்றார்.

By

Related Post