Breaking
Sun. Jan 12th, 2025

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ இழந்துள்ளார் என ஜே.வி.பி.யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இப்படி கோருவதற்கு, அரசியலமைப்பில் இடமில்லை.

‘மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ இழந்துள்ளார். இதுவொரு தனிப்பட்ட  பிரச்சினையாகும். அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு அமையவேனும் மீண்டும் அவர் போட்டியிட முடியாது.

இதனால், இதுவொரு பொதுப் பிரச்சினையல்ல. இது தொடர்பில் நீதிமன்றத்திடம் கேட்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கடந்த காலங்களில் ராஜபக்ஷ நிர்வாகத்துக்கு ஏற்றவாறு நீதிமன்ற கட்டமைப்பை கொண்டு நடத்தினர். ஆனால், இன்று உயர்நீதிமன்றத்துக்கு பாரிய பொறுப்பொன்று உள்ளது என்று அவர் கூறினார்.

ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கும். ராஜபக்ஷ நிர்வாகத்திலுள்ள சட்டவிரோத நடவடிக்களை தடுப்பது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கதைப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post