மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பொன்சேகாவுக்கு அநியாயம் செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷவின் அரசாங்கம் பொன்சேகாவுக்கு ஏராளம் அநியாயங்களைச் செய்துள்ளது. அவரது குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டே நாளில் சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும். அவரது குடியுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் திருப்பியளிக்கப்படும்.
நாட்டிற்கு பெரும் ஆபத்தாக இருந்த பயங்கரவாதத்தை முறியடித்தவர் சரத் பொன்சேகா. அவருக்கு அதற்கான சகல மரியாதைகளும், கௌரவமும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.