Breaking
Sat. Jan 11th, 2025

கடந்த காலங்களில் கட்டுமான அபிவிருத்தியில் பெற்றுக்கொண்ட பயிற்சியானது அபிவிருத்தி என்பது கட்டுமானம் மட்டுமல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிக்கொத்தவில் கொழும்பு மாவட்ட இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிராமங்களில் அபிவிருத்தி இல்லாமையின் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெற்றது என குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி என்பது கட்டுமானம் என துரதிஷ்டவசமாக கடந்த 5, 6 வருடங்களில் இந்த நாட்டில் பயிற்சி பெறப்பட்டுள்ளது. கட்டுமானம் என்பது அபிவிருத்தியில் ஒரு அங்கமாகவும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுமாகவுமே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டும், இல்லையேல் எமது கைகளில் பணம் இருக்க வேண்டும். கிராமங்களில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்ட போதிலும் அவ்வாறான ஒன்று ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் இன்று கிராம மட்டங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 5 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கையில், நாட்டில் சகல இடங்களிலும் அபிவிருத்தி ஏற்படவில்லை என்பதை நம்மால் தெளிவாக காணமுடியும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இளைஞர் அமைப்பினர் கட்சி பேதங்களின்றி அரசியல் நிலைத்தன்மைக்காகவும், இளைஞர்களின் மேம்பாட்டுக்காகவும் சேவையாற்ற வேண்டும் என பிரதமர் கோரியுள்ளார்.

வெறுமனே கட்டுமானங்களை கொண்டு நாட்டில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என பொய்க்கணக்கு போடக்கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post