மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
தேர்தலுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர்களுக்கும் தேர்தல் திணைக்களத்தினால் நேற்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அனேகமாக ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கு முன்பாக தேர்தல் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபத் தேர்தலில் மூன்றாவது தடவையாக போட்டியிட முடியுமா? இல்லையா? என்பது தொடர்பில் உயர்நீதிமன்றம் தனது விளக்கத்தை நேற்று முந்தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.