இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் இவ்வாறு கூறியுள்ள அவர், கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் இலங்கை தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கனவை நனவாக்க தான் உதவி புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.