Breaking
Mon. Dec 23rd, 2024

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கொலையாளிகள் பாலியல் வன்கொடுமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை விதிக்கப்படும்.

எதிர்வரும் 11ம் திகதி இந்தக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

புதிய அரசாங்கத்தின் கீழ் தூய்மையான அரசாங்கமொன்று அமைக்கப்படும்.

மாத்தறை தெவினுநுவரவில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு திரட்டி நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Post