மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்து போகும் என பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் தோல்வியை பொறுத்து கொள்ள முடியாது மகிந்தவின் வருகை குறித்து பேசி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை .இழக்கும் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலரே அந்த கட்சியை அழிக்க போகின்றனர்.
மகிந்தவின் வருகை (இலங்கைக்கு பௌத்த மதத்தை கொண்டு வந்த மகிந்த தேரரின் வருகை) என்பது இலங்கையின் வரலாறு மற்றும் சமயத்துடன் சம்பந்தப்பட்ட வார்த்தை.
அந்த வார்த்தையை பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு மன்னர் என்ற பைத்தியம் இன்னும் குணமாகவில்லை என்பது புரிகிறது. இது தற்போது கேலியாகி விட்டது.
மகிந்தவின் வருகை அல்ல, எதனை கூறி வந்தாலும் அவர் செய்த விடயங்கள் தொடர்பில் பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. எந்த வகையிலும் மகிந்தவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்காது.
இது தோல்வியடையும் வேலை, இறுதி மகிந்த ராஜபக்ச வெட்கத்திற்கு உள்ளாகும் நிலைமையே ஏற்படும்.
தனது ஆலோசனையின்றி விமல் வீரவன்ஸ போன்றவர்கள் செய்யும் வேலையாக மகிந்த ராஜபக்ச இதனை காண்பிக்க முயற்சித்து வருகிறார்.
எதுவும் தெரியாதவர் எப்போதும் அவர் நடிக்கவே செய்தார். தற்போது அதற்கு இடமில்லை. மகிந்தவின் காலம் முடிந்து விட்டது.
மகிந்தவுக்கு 58 லட்சம் வாக்குகள் இல்லை. அது முடிவடைந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை. மைத்திரிபால ஆட்சிக்கு வந்தால், புலிகள் வந்து விடுவார்கள் என்று பிரசாரம் செய்தமைக்காக அந்த வாக்குகள் கிடைத்தன.
மகிந்தவுக்கு தற்போது சுமார் 70 வயதாகிறது. அவர் தற்போது ஓய்வுபெற வேண்டும். அதற்கான வயதை அவர் அடைந்து விட்டார். ஆட்சியில் இருந்த காலத்தில் செய்தது போதும். ஜனாதிபதியாக தோல்வியடைந்த ஒரே ஜனாதிபதி மகிந்த மாத்திரமே.
வரையறையை தாண்டி பதவியில் இருக்க வேண்டாம் என்று அந்த தோல்வியில் அவர் மாத்திரம் அல்ல அரசியல்வாதிகளும் சிறந்த பாடத்தை கற்றுள்ளனர்.
இதனையும் மீறி அவர் மீண்டும் வருவாரேயானால், இதனை விட சிறந்த பாடத்தை கற்றுக்கொள்ள முடியும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.