திருகோணமலை மாவட்டம், சம்பூர் பிரதேசத்தில் கடந்த அரசாங்கத்தினால் சுவீக ரிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு காணிக ளில் ஒரு பகுதியை விடுவிப்பது தொடர்பான ஜனாதிபதியின் விஷேட வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பாக பிரகடனம் வெளியிடப்பட்டுள்ள விஷேட வர்த்தமானி அறிவித்தலின் படி, குறித்த காணி சுவீகரிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் வெளியிடப்பட்டிருந்த இரு வர்த்தமானி பிரகடனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து அந்த பகுதியில் கடந்த 9 வருடங்களாக தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சம்பூர் பிரதேச மக்கள் மகிழ்சியும் உற்சாகமும் அடைந்துள்ளார்கள்.
முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு குறித்த காணி கையளிப்பு தொடர்பாக 2012.07.19 திகதியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனம், அதனை தொடர்ந்து கைத்தொழில் ஊக்குவிப்பு வலயமாக பிரகடனம் செய்யும் வகையில் 2012.05.17 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனம் ஆகியனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 818 ஏக்கர் காணி மீளப் பெறப்பட்டு காணிகளை இழந்த மக்களிடம் மீளக் கையளிக்கப்படவுள்ளது