மக்களின் துயரங்களை அறிந்த தலைவன் என்ற வகையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார்.நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி திகண பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதிநிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளதாக கூறினார்.எனினும் மக்கள் பசியில் வாடுவதாகவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.