– அஸ்ரப் ஏ சமத் –
பாராளுமன்றத்தில் ஊடக அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட விவாத்தின்போது பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க உரையாற்றும்போது
பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சில ராஜபக்ச ரெஜிமன்ட் உறுப்பினர்கள் தாக்குவதற்கு வந்துள்ளனா்.
கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் பாராளுமன்றதுக்கு வெளியில் வைத்து முஸ்லீம்களை எல்லாம் அடித்தீா்கள்.
அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு தற்பொழுது அந்த சண்டித் தணத்தை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்து முஸ்லீம் எம்.பிக்கு அடிக்க வருகின்றீா்கள்.
இதனை நாம் அனுமதிக்க முடியாது. சகல கட்சித் தலைவா்கள் கூட்டத்தினைக் கூட்டி இதற்கு முடிபு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.