Breaking
Sun. Dec 22nd, 2024
யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வடக்கில் பல புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். கட்டிடங்கள் அமைக்கப்பட்டன, வீதிகள் புனரமைக்கப்பட்டன, ஆனால் வடபகுதி தமிழ் மக்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்தவத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில்  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர்  அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கோ , வாழ்க்கையை கொண்டு செல்வதற்கோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எந்த உதவிகளையும் செய்யவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஸ வடபகுதியில் கட்டிடங்களை அமைத்தார், இவற்றுக்கான நிர்மாணப்பணிகளுக்காக பணியாளர்கள் தெற்கிலிருந்து விமானத்தின் மூலம் வடக்கில் இறக்கப்பட்டனர். அங்குள்ள தமிழ் மக்களுக்கு இவற்றில் இடமளிக்கவுமில்லை. அவர்கள் இதனை வேடிக்கை பார்க்கும் நிலையையே மஹிந்த ராஜபக்ஸ ஏற்படுத்தினார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
யுத்தத்திற்கு பின்னர் வடக்;கு மக்களை மஹிந்த ராஜபக்ஸ ஒரு காட்சிப்பொருளாகவே வெளி உலகிற்கு காட்சிப்படுத்தினார். இதுவே அவரது காலத்தில் நடந்தது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தற்போது அந்த நிலையை எமது நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் மாறியுள்ளோம். இன்று நாம் அந்தப்பிரதேச மக்களின் அபிவிருத்திற்கான திட்டங்களின் ஒப்பந்தங்களை வடக்கிலிருப்போருக்கே வழங்கி மக்களின வருமானத்திற்கு வழிசெய்துள்ளோம். இதனால் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

By

Related Post