முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தனது வாய் காரணமாக மீண்டும் ஒரு முறை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மஹிந்த அரசியல் சண்டியராக மாற முயற்சித்து வருவதாகவும், தவறுதலாகவேனும் மஹிந்த ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டில் உள்ள தமிழ் முஸ்லிம் முற்போக்கு கட்சிகளிடம் பழிவாங்குவார் என்பது நிச்சயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த இல்லாமல் போயுள்ளதாகவும், மஹிந்தவுடன் இணைந்து கொள்ள மைத்திரிக்கு தார்மீக ரீதியான உரிமை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த இன்றி ஏன் கட்சியினால் தேர்தலில் நிற்க முடியாது எனவும், தமக்கு இந்தப் பிரச்சினை காணப்பட்டதாகவும் ரணில் சஜித்தை முரண்படச் செய்ய சிலர் முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்தவர்கள் இன்று தோல்வியடைந்து உள்ளதாகவும் தற்போது நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த போதிலும் எங்கிருந்து போட்டியிடுகின்றார் என அறிவிக்கப்படவில்லை எனவும் இதுவா அரசியல் வங்குரோத்து நிலை என்பது என ஹரீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இம்முறை மஹிந்த படுதோல்வி அடைந்து வெளியேறுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவும் மைத்திரியும் இணைந்து கொண்டால் ஏற்படவுள்ள தோல்வி இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.